பாவை வியப்பேன்
பாவில்வாழ் குடிபிறந்தேன்
பாவால்வந்த பைங்கூழால்
மெய் வளர்த்தேன்
அப்பாவால் தமி்ழ்பயின்றேன்
அப்பாவை மதித்திருந்தும்
பலபாவை தோய்ந்திருந்தும்
சிலபாவை நெய்திருந்தும்
பைங்கூழும் சுவைக்கவில்லை
பைந்தமிழும் சுவைக்கவில்லை
பலபாவை எழில்மகிழ்ந்தேன்
ஒருபாவை பின்மணந்தேன்
அப்பாவை என்பாவை
இன்பாவை எனப்பிழைத்தேன்
பலபாவை உளம்மகிழ்ந்தேன்
சிலபாவை உணர்ந்தாய்ந்தேன்
நற்பாவை தரும்பைந்தமிழில்
பெருகிவரும் செந்தேனில்
கசியும்மனம் உருகிநின்று
தமிழ்ப்பாவை வியப்பதனால்
இப்பாவை செயவிழைந்தேன்
Friday, April 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment