Sunday, February 24, 2008

காற்றுக்கென்ன வேலி

அவர்கள்

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?

நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று
நான் பூமியில்
தோகைபோல்ஆடுவேன்
ஆடல் ஒன்று
கன்று குட்டி
துள்ளும் போது
காலில் என்ன
கட்டுப் பாடு
காலம் என்னை
வாழ்த்தும் போது
ஆசைக் கென்ன
கட்டுப் பாடு?

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?

தேர் கோண்டுவா
தென்றலே இன்றுநான்
என்னைக் கண்டேன்
சீர் கொண்டுவா
சொந்தமே இன்றுநான்
பெண்மை கொண்டேன்
பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன்
பேசிப் பேசிக்
கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு
கோவில் போவேன்
குற்றம் என்ன
ஏற்றுக் கொள்வேன்

காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம்
சங்குக் குள்ளே
அடங்கி விடாது
மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது?