Thursday, September 27, 2007

ஆண்டவன் படைச்சான், அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்

ஆண்டவன் படைச்சான்
எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான்

பணங்களைச் சேத்து
பதுக்கி வச்சால்
அது மடமை
பகவான் படைத்த
பணமெல்லாம் பொதுவுடமை
கையில் கிடைப்பதை
வீசி மகிழ்வதுதான்
என் கடமை
எந்தன் உரிமை
நல்ல வெள்ளித் துட்டு அள்ளிவிட்டு
துள்ளித் துள்ளி ஆடவிட்டு
சிரிப்பதும் மகிழ்வதும்
தனி மகிமை

Tuesday, September 11, 2007

தெய்வம் இருப்பது எங்கே?

சரஸ்வதி சபதம் (கவியரசு கண்ணதாசன்?):

கலையில் கவியில்
மழலை மொழியில்
தெய்வம் உண்டு
இவைதான் தெய்வம்
என்பதை அறிந்தால்
ஏற்கும் உனது தொண்டு
தெய்வம் ஏற்கும்
உனது தொண்டு

தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு

தங்கப் பதக்கம்:

-முருகனா? திரைநாயகனா?

காவல்தலைவன் ஞானத் தமிழன்
அன்புக்குமரன் எந்தன் துணைவன்

-திரையில் நாயகன் பெயர் குமரனா?

தங்க மகனைப் பெற்றவளென்று
என்னை உலகம் சொல்லி மகிழும்