Sunday, July 1, 2007

மாலே மணிவண்ணா

அன்றந்த மன்றத்தில்
பாஞ்சாலி சபதத்தில்
பாரதிர நாடகத்தில்
மறைந்திருந்து் நாயகனாய்
மாயங்கள் செய்தனையே
மணிவண்ணா

அமிழ்தமிழ்து எனும்வண்ணம்
நாடகங்கள் இனிப்பதற்கு
இயலுமோ இனியிங்கு
எம்மாலேமணிவண்ணா?

ஆழியிலே ஆடுபவன்
ஆழி கடந்திங்கு
ஆசானாய் ஆடியபின்
ஆழி கடந்தாடுதற்கு
நாடினையே
அமிழ்தமிழ்தாய் நாடினையே