Friday, April 20, 2007

நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை

இந்த வரிகளை அறிமுகத்தில் எடுத்தாண்டதால், இவ்வரிகளைப் படைத்தவரைப் பற்றிய வியப்புரைகளிலேயே ஆரம்பிக்கிறேன்.

இவ்வரிகள், திரைக்கதையில் வேறு சூழ்நிலையில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும், இவ்வரிகள் கவிஞ்சரின் சிலநேர மனநிலை வெளிப்பாடோ என எண்ணிப் பார்க்கிறேன். கவிஞ்சரின் வரிகளில், வடிவங்களில், அழகில், உணர்வில், தமிழில் உள்ளம் மயங்கி நிற்பவர்கள் எத்தனை கோடி?

ஆனால், கவிஞ்சர் "நான் கவிஞ்சனுமில்லை, நல்ல ரசிகனுமில்லை" என்று பாடுகின்றார். ஏன்?

பதில் கவிஞ்சரின், மற்ற பல்வேறு பாடல்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்த உள்ளம், மற்ற பல புலவர்களின் கவியில், தமிழில் தன்னைப் பறி கொடுத்து, மகிழ்ந்து, மயங்கி, வியப்பதாலா? அந்தக் கவிஞ்சர்களின் முன்னால் தான் ஒரு கவிஞ்சனில்லை என்று சொல்கின்றாரா? அந்த்ப் புலவர்களின் பாடல்களில் இன்சுவையில் மயங்கிய பின்னும், அவற்றில் மேலும் சுவையிருக்கிறது. நான் அதன் சுவையை முற்றிலும் உணர முடியவில்லை. ஏனென்றால், அது என் ரசனையின் குறைபாடு என்று பாடுகின்றாரா? கம்பனை, ஆண்டாளை, குற்றாலக்குறவஞ்சியை, வள்ளுவனை, பக்தி இலக்கியங்களை அக்கவி வியந்து பாடுவதை பல்வேறு பாடல்களில் கேட்கலாம்.

அந்தக் கவிஞ்சனின் பாடல்களை வியக்கும் பல கவிஞ்சர்கள், இவனே கவிஞ்சன், இவனே ரசிகன் என வியக்கிறார்கள். ஆனால், அந்தக் கவிஞ்சரோ மற்ற கவிஞ்சர்களைக் கண்டு வியக்கிறார்.

இதை எல்லாம் சேர்த்துப் பார்த்தால், தமிழின் இனிமையை நாம் முழுமையாக் அனுபவிக்காமல் தவற விடுகின்றோம் என்ற என் எண்ணம் மேலும் வலுப்படுகின்றது.

பாட்டுக்கொரு புலவன் பாரதியும்,
யாமறிந்த புலவரிலே
கம்பனைப் போல்
வள்ளுவனைப் போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமே
பிறந்த்ததில்லை
உண்மை வெறும்
புகழ்ச்சி்யில்லை

என்று பாடியிருப்பது நினைவுக்கு வருகின்றதா?

எங்கே நாம் இதெல்லாம் கவியின் கற்பனை, உயர்வு நவிற்சி அணி என்று எண்ணுவிடுவோம் என்று நினைத்துதான், பாரதி, "உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" என்று உறுதியும் செய்கின்றாரா?

No comments: